Oct 28, 2018

 தமிழ் அரங்கம்

 

அக்டோபர் 28 2018 ஞாயிற்றுக்கிழமை

மதியம் 2 மணி முதல் 5 மணி வரை

Etobicoke Civic Centre – Etobicoke

 

 

தமிழ் அரங்கம் அக்டோபர் 28 2018 ஞாயிற்றுக்கிழமையன்று  இனிதாக நடைபெற்றது.

 

இடம்: Etobicoke Civic Centre   399, The West Mall, Etobicoke, ON M9C 2Y2 

Direction 

 

நேரம்: மதியம் 2 மணி முதல் 5 மணி வரை

 

சிறப்பு பேச்சாளர்கள் : 


தலைப்பு: திருக்குறளில் நுண்பொருள்கள் 

முனைவர் திரு.சந்திரமோகன்  


தமிழ்நாட்டிலிருந்து சைவசித்தாந்தரத்தினம் பேராசிரியர் முனைவர் சந்திரமோகன்  திருக்குறள் மற்றும் இயற்பியலில் பல ஆய்வுகளை நடத்திவருகிறார் . கோவை செம்மொழி மாநாட்டில் ஆய்வுரை நிகழ்த்தியவர்.   சுமார் 170 ஆய்வுக்கட்டுரைகளை பன்னாட்டு சஞ்சிகைகளில் பிரசுரித்தவர். திருக்குறளில் நுண்ணிய அறிவியல் கோட்பாடுகள்(Amazing Modern Science Concepts in Thirukural)    என்ற தலைப்பில் ஆய்வுரையாற்றுகின்றார்.

 

தலைப்பு: "தமிழ் பிராமி எழுத்துக்களின் பழமையும் சரித்திரமும"  

ஜெரார் அம்புரோஸ் (Gerard Ambrose ) 


ஜெரார் அம்புரோஸ் என்பவர் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்று Montreal, Canadaவில் வசித்து வருகிறார். அவர் ஓய்வு பெற்ற பிறகு சங்க காலத்திற்கு முன்பு இருந்த தமிழ் பிராமி எழுத்துக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். தமிழ் பிராமி எழுத்துக்களை பற்றிய விவரங்கள் அதிக அளவில் கிடைக்கவில்லை. மேலும் இலங்கையில் உள்ள பிராமி எழுத்துகளை பற்றி எந்த புத்தக்கத்திலும் விளக்கமாக காணவில்லை. அதனால் தமிழ் பிராமி பற்றி 5 வருடங்களின் ஆராய்ச்சியின் பலனாக  தமிழ் பிராமி அடிப்படை எழுத்துகளைப் பற்றி `ரு புத்தகம் வெளியிட்டுள்ளார். 

To Advertise here contact : macafamily@gmail.com
↑